தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - 40 ஆயிரம் பேர் பயன் : அமைச்சர் கோவி. செழியன் பெருமிதம்!

“கடந்த நான்கு கல்வியாண்டுகளில், 7.5% இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் 1,165 கோடி ரூபாய்க்கு மேல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்!” என அமைச்சர் கோ வி.செழியன் தகவல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  7.5% இடஒதுக்கீடு - 40 ஆயிரம் பேர் பயன் : அமைச்சர் கோவி. செழியன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சமூகநீதியை நிலைநாட்ட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதில் முக்கிய பங்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அமைந்துள்ளது.

இந்நிலையில், இடஒதுக்கீடு செயல்படுத்தலின் வழி, தமிழ்நாடு அரசு புரிந்துள்ள சாதனையை உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி சாதனைகளைத் திராவிட மாடல் அரசு படைத்து வருகிறது. திராவிட மாடல் அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை பல ஆய்வுகள் மெய்பித்துள்ளன.

அதேபோல மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை எந்த இடையூறு இல்லாதாதவாறு சாதிக்க சாத்தியப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இத்திட்டங்களை போலவே அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உயர்த்தவேண்டும், உயர்கல்வி சேர்க்கையில் அவர்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் என 20.9.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  7.5% இடஒதுக்கீடு - 40 ஆயிரம் பேர் பயன் : அமைச்சர் கோவி. செழியன் பெருமிதம்!

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்முயற்சியின்கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த நான்கு கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,165 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் எத்தகைய இடையூறையும் எதிர் கொண்டு விடக்கூடாது எனும் முதலமைச்சரின் அக்கறை உள்ள நடவடிக்கையினால் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக தொழிற்படிப்புகளில் 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2,382 பேர், வேளாண் படிப்புகளில் 1,369 பேர், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் 261 பேர், சட்டப் படிப்புகளில் 626 பேர் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்காண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் எனும் சமூக நீதிக் கண்ணோட்டத்தை அரசியல் இலட்சியமாக கொண்டு செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசு அனைவருக்கும் வாய்ப்புகள் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கின்றது. தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை பொருத்தவரை அவர்களுக்கு தந்தையாக இருந்து அவர்களுக்கான திட்டங்களை உள்ளார்ந்த அன்போடும் அக்கறையோடும் நடைமுறைப்படுத்திவருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

தமிழ்நாட்டின் தெருக்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடக்கும் தருணமெல்லாம் அவரை அப்பா! அப்பா! என உள்ளன்போடு தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்கள் அழைத்து மகிழ்வது முதலமைச்சரின் இதுபோன்ற போன்ற சாதனைகளால்தான்.

banner

Related Stories

Related Stories