தமிழ்நாடு

”நமது இளைஞர்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள்” : அமைச்சர் PTR பேச்சு!

இந்திய இளைஞர்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

”நமது இளைஞர்கள் தான் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள்” : அமைச்சர் PTR பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவக் கல்லூரியில் The Rise அமைப்பின் சார்பில், உலக அளவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை உயர் தொழில்நுட்பமான "Deep Tech" குறித்த தொழில்முறை கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கல்வி ஒன்றுதான் நமது சமூகத்தை மாற்றியுள்ளது. இதனால்தான் நாம் அனைவரும் பொருளாதர ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளோம்.

இந்த வளர்ச்சியில் பெண்களின் முன்னேற்றம் மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது. இது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தியதே. பெண்களுக்கு சமமான வழியில் கல்வியை வழங்குவதன் மூலம் உலகத்தரத்திற்கு உயர்ந்துள்ளனர்.

உலகில் உள்ள பார்ச்சூன் 500 நிறுவனங்கள் இந்தியர்களால் வழிநடத்தப்படுகின்றன. இதில் 30% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். உலகம் முழுவதும் இளைஞர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தகுதி வாய்ந்த இந்திய இளைஞர்கள் எதிர்கால பொருளாதாரத்தை இயக்கப் போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories