தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகள் உள்ளிய 14,104 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு !

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகள் உள்ளிய 14,104 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. ஜனவரி 10,11,12,13 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன .

பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகள் உள்ளிய 14,104 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு !

சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் , மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது . மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

பொங்கல் பண்டிகையின்போது கடந்தாண்டு 6 லட்சத்து 54 ஆயிரத்து 472 பேர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5340 பேருந்துகளும் சேர்த்து 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories