தமிழ்நாடு

கொளத்தூர் பெரியார் நகரில் கட்டப்படும் நவீன மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? -அமைச்சர் சேகர்பாபு

கொளத்தூர் பெரியார் நகரில் கட்டப்படும் நவீன மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? -அமைச்சர் சேகர்பாபு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஜி.கே.எம்.காலணியில் உள்ள சுப்பிரமணியன் தெருவில் வீதி வீதியாக நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை, கோரிக்கைகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கேட்டறிந்தனர்.

இறுதியாக திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொளத்தூர் பெரியார் நகரில் கட்டப்படும் நவீன மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? -அமைச்சர் சேகர்பாபு

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “தமிழ்நாட்டில் ஒரு முன்மாதிரியான தொகுதியாக ஒன்றியத்தில் முன் மாதிரி முதலமைச்சராக விளங்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்த்து பார்த்து இந்த தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார்.

குறிப்பாக மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு இந்த சட்டமன்ற தொகுதிக்குள்ளாகவே அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக 500 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. MRI, CT ஸ்கேன் உள்ளிட்டவற்றை கொண்ட சிறப்பு வாய்ந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

கொளத்தூர் பெரியார் நகரில் கட்டப்படும் நவீன மருத்துவமனை: எப்போது பயன்பாட்டுக்கு வரும்? -அமைச்சர் சேகர்பாபு

கூடுதலாக 6 தளங்கள், 500 படுக்கைகள் மொத்தமாக 750 படுக்கைகள் கொண்ட அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 7000-லிருந்து 10 ஆயிரம் புறநோயாளிகள் வந்து செல்ல இயலும். கொளத்தூர் தொகுதியில் சிறந்த மருத்துவமனையாக பெரியார் நகர் அரசு மருத்துவமனை திகழும்.

DMS கீழே இந்த மருத்துவமனை தற்பொழுது உள்ளது. புதிதாக மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த தொகுதியில் செய்யப்பட்டு வருகிறது மார்ச் 1 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாத இறுதியில் இந்த மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டு அர்ப்பணிக்கப்படும்" என்றார்.

banner

Related Stories

Related Stories