தமிழ்நாடு

2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது : எங்கு தெரியுமா?

2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது : எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் விழா பொங்கல் திருநாள். இந்த விழாவின்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழங்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் நாற்காலி போன்ற பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

மேலும், சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் சிறப்பு பரிசாக இருசக்க வாகனம் வழங்கப்பட உள்ளது. 5000 க்கும் மேற்பட்டோர் வீர விளையாட்டை கண்டுகிளித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories