தமிழ்நாடு

அண்ணா பல்கலை. விவகாரம்: “விளம்பர அரசியலுக்காக போராட்டம்” -பாமகவுக்கு குட்டு வைத்து அனுமதி மறுத்த நீதிபதி!

அண்ணா பல்கலை. விவகாரத்துக்கு போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாமக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலை. விவகாரம்: “விளம்பர அரசியலுக்காக போராட்டம்” -பாமகவுக்கு குட்டு வைத்து அனுமதி மறுத்த நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், கடந்த டிச.23-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை சில மணி நேரங்களிலேயே சிசிடிவி காட்சி உதவியுடன் கைது செய்தனர். தற்போது குற்றவாளி ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க முனைப்பு காட்டி வருகிறது எதிர்க்கட்சிகள்.

அண்ணா பல்கலை. விவகாரம்: “விளம்பர அரசியலுக்காக போராட்டம்” -பாமகவுக்கு குட்டு வைத்து அனுமதி மறுத்த நீதிபதி!

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மீது குற்றம்சாட்டி வருவதோடு, அரசுக்கு எதிராக வன்முறையை தூண்ட அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகிறது. தற்போது இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக விளங்கும் நிலையில், வேண்டுமென்றே பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த துடிக்கிறது எதிர்க்கட்சிகள்.

அந்த வகையில் இந்த விவகாரத்தை கண்டித்து அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், வன்முறை ஏற்படாமல் இருக்க போலீசார் அனுமதி மறுத்தனர். அதே போல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற இருந்தது.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பாமக சார்பில் வழக்கறிஞர் K. பாலு போராட்டத்துக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக-வுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி, கண்டனம் தெரிவித்து அனுமதி மறுத்து உத்தரவிட்டார் நீதிபதி.

அண்ணா பல்கலை. விவகாரம்: “விளம்பர அரசியலுக்காக போராட்டம்” -பாமகவுக்கு குட்டு வைத்து அனுமதி மறுத்த நீதிபதி!

இதுகுறித்து நீதிபதி வேல்முருகன் தெரிவித்ததாவது,

* பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?

* போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று.

* இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும்.

* இந்த விவகாரத்தை அனைவரும் அரிசியலாக்கி வருகிறார்கள்.

* இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

* காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

* இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல.

* வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

* இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

தொடர்ந்து இவ்விவகாரத்தை பத்திரிகையாளர்கள் பொறுப்புணர்வு இன்றி கடந்த 10 நாட்களாக விவாதம் செய்துவருகிறார்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories