தமிழ்நாடு

சென்னையில் ஒழுங்கற்ற முறையில் நடப்படும் கம்பங்களுக்கு முற்றுப்புள்ளி : மாநகராட்சி அதிரடி முடிவு !

சென்னையில் ஒழுங்கற்ற முறையில் நடப்படும் கம்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் ஒழுங்கற்ற முறையில் நடப்படும் கம்பங்களுக்கு முற்றுப்புள்ளி : மாநகராட்சி அதிரடி முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இண்டெர்நெட் நிறுவனங்களால் அமைக்கப்பட்ட கம்பங்கள் ஒழுங்கற்ற முறையில் நடப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.

அதனைத் தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் கம்பங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக கம்பங்கள் அமைத்துள்ள நிறுவனங்களுக்கு அபராத தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் ஒழுங்கற்ற முறையில் நடப்படும் கம்பங்களுக்கு முற்றுப்புள்ளி : மாநகராட்சி அதிரடி முடிவு !

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 75,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், அனுமதி பெறாமல் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 1 லட்சம் அபாராதம் பெற்று அதனை அகற்ற உத்தரவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட கம்பங்களுக்கு ( 1 கம்பத்திற்கு ) 50,000 ரூபாய் அபராதத் தொகையை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இண்டெர்நெட் நிறுவனங்களாக (JIO AIRTEL & ACT) நிறுவங்கள் மூலம் புதிதாக கம்பங்கள் அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories