தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி பாலம் : நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் !

திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி பாலம் : நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மட்டும் விவேகானந்தர் பாறை ஆகிய பகுதிகளுக்கு படகு சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருகிரியாது.

இதன் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சென்று வரும் சுற்றுலா பயணிகள், பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக எழுந்தது.

திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி பாலம் : நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் !

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் விதமாக கண்ணாடி பாலம் அமைக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் விரைவு கதியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர் இந்த பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரியில் சுற்றுலா துறை மேலும் வளர்ச்சி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories