தமிழ்நாடு

'நான் முதல்வன்' திட்டம் : ஜப்பானில் INTERNSHIP... முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்த மாணவிகள் !

6 மாணவிகள் ஜப்பான் நாட்டில் பயிற்சி முடிவற்ற நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

'நான் முதல்வன்' திட்டம் : ஜப்பானில் INTERNSHIP...  முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்த மாணவிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2022 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களின் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்படுத்தி பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு அங்கமாக ஸ்கவுட் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 25 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டு பயன் பெற்றனர்.

அதன் அடுத்த கட்டமாக இந்த ஆண்டு பத்து மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

'நான் முதல்வன்' திட்டம் : ஜப்பானில் INTERNSHIP...  முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்த மாணவிகள் !

இந்த ஏழு மாணவிகளும் ஜப்பான் நாட்டில் பயிற்சி முடிவற்ற நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் சென்று திரும்பிய 6 கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சியின் மூலம் பல்வேறு திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவியதாகவும், எதிர்காலத்தில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தையே தொடங்கும் அளவிற்கு நம்பிக்கையை தருவதாகவும், இதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என மாணவிகள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories