தமிழ்நாடு

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் : வெளியான அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் : வெளியான அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோதனை ஓட்டம் அடிப்படையில் வரும் 22 ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றத்தை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தப்பட உள்ளனர்.

அதன்படி அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் OMR சாலை நோக்கி திருப்பி விடப்படுகிறது. அதேபோல் அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி CPT பாலிடெக்னிக் கல்லுாரியின் முன்புறம் 'U' திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் : வெளியான அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !

மேலும் கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்வதற்கும், ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் பின்புறத்தில் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் பயணிகளை இறக்கிவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது. இந்த மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories