தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் சிங்கார சென்னை! : அமைச்சர் கே.என். நேரு!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்ற காலத்தில் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி காட்டினார்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் சிங்கார சென்னை! : அமைச்சர் கே.என். நேரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்து, 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 559 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமை தாங்கி திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்ற காலத்தில் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி காட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் சிங்கார சென்னை! : அமைச்சர் கே.என். நேரு!

அவரின் அந்த தொடர் முயற்சிகளால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி புதிய சென்னையை உருவாக்கி வருகிறார். இந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் பெருவாரியான சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையின் பெருவாரியான பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. ஏரிகள் துவாரப்பட்டுள்ளது. 2000 கிலோ மீட்டருக்கு மேலாக ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது.

சாலை ஒர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாநகராட்சி செய்து கொண்டிருக்கிறது.

மழைக்காலத்தில் உடனடியாக தேங்கி தண்ணீரை அகற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி” என்றார்.

banner

Related Stories

Related Stories