தமிழ்நாடு

“களத்திற்கே வராத சில தற்குறி திமுக குறித்து விமர்சிக்கலாமா?”- விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

களத்திற்கே வராத சில தற்குறி திமுகவின் 200 தொகுதி வெற்றி இலக்கு குறித்து விமர்சிப்பதா? என்று விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

“களத்திற்கே வராத சில தற்குறி திமுக குறித்து விமர்சிக்கலாமா?”- விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை ஜி.கே.எம் காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் தொகுதி திமுக சார்பில் 'இல்லார்க்கு நாமே உறவு - எல்லோருக்கும் நாமே உறவு' என்ற தலைப்பில் 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ் குமார் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

“களத்திற்கே வராத சில தற்குறி திமுக குறித்து விமர்சிக்கலாமா?”- விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது, “தமிழ்நாட்டு மக்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வருகிறார்கள். கருவறை முதல் கல்லறை வரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களால் நாடு சுபிட்சமாக உள்ளது.

ம்களிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் உள்ளிட்ட பெண்களுக்காக அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளிக் கொடுக்கும் திமுக ஆட்சியை பார்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சிலர் கூறுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதோடு நிறுத்தி விடாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியலைப் பற்றி தெரியாத சிலர் திமுக குறித்து பேசுகிறார்கள். களத்திற்கே வராத சில தற்குறி திமுகவின் 200 தொகுதி வெற்றி இலக்கு குறித்து விமர்சிப்பதா? திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும். எங்களின் நிலைப்பாடு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது அல்ல, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு.

வில்லிலிருந்து புறப்படும் அம்பாக திமுக மீது எப்போதெல்லாம் அவதூறு பரப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திமுகவின் தொண்டன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பான். 2026-ல் திமுக தலைவரை மீண்டும் அரியணையில் ஏற்றும் வரையில் எங்களின் பயணம் ஓயாது; வேகம் குறையாது” என்றார்.

banner

Related Stories

Related Stories