தமிழ்நாடு

”பேரிடரிலும் அரசியல் செய்யும் பழனிசாமி” : அதிமுக ஆட்சியின் அவலங்களை நினைவுபடுத்திய அமைச்சர் KKSSR!

பேரிடரிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

”பேரிடரிலும் அரசியல் செய்யும் பழனிசாமி” : அதிமுக ஆட்சியின் அவலங்களை நினைவுபடுத்திய அமைச்சர் KKSSR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் டிசம்பர் 1 ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளை தயார் நிலையில் வைத்திருந்தது. இதனால் பெரும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னையில் மழை நின்றவுடன் வெள்ளம் வடிந்துவிட்டது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் தமிழ்நாடு அரசுக்குக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதை தாங்கிக் கொள்ளமுடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேண்டும் என்றே அரசு மீது குறைசொல்லி வருகிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க ஆட்சியின் போது பேரிடர் காலத்தில் நடந்த அவலங்களை எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நினைவூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அ.தி.மு.க உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் பேரிடரிலும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் 2005 டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருமழையின்போது நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து, எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல், சென்னை அசோக் நகர் பள்ளி முன் திரண்ட பொதுமக்கள் கூட்ட நெரிசலில் மிதிபட்டு 42 பேர் உயிரிழந்ததையும், வியாசர்பாடியிலும் 6 பேர் உயிரிழந்த அவலத்தையும் மறக்க முடியுமா! அதே போன்று, 2015-ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடுவதில் காலம் தாழ்த்தி, எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதால், சென்னை மாநகரம் மூழ்கி வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. அப்போது அ.தி.மு.க அரசு நிவாரணப் பணிகளில் காட்டிய அலட்சியம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனை அன்றைக்கு பத்திரிகைககள் கண்டித்தன. தன்னார்வலர்களும் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை போட்டு அதிமுக ஸ்டிக்கர்கள் ஒட்டி அடாவடித்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அத்தகைய காட்சிகளோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் நாடும் தொண்டுகளை எல்லாம் நினைவு கூர்ந்து ஒப்பிட்டு, முதலமைச்சர் அவர்களை மக்கள் பாராட்டுவதை பொறுக்க முடியாமல்தான் அவதூறுகளை அள்ளி விசுகிறார்கள். மக்களின் மனங்களை வெல்லும் இயக்கும் திமுக. அதை இறுதி மூச்சு வரை செய்து கொண்டே இருக்கும் திராவிட மாடல் அரசு" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories