வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபென்சல் புயலாக நேற்று உருவானது. இந்தப் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
அதேபோல், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் காரணமாக சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது புயல் மரக்காணம் அருகே கரையை கடக்க தொடங்கிய நிலையில் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் செங்கல்பட்டு, காங்சிபுரம், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.