2024 - 25 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சுமார் ரூ. 7.99 கோடி செலவில் பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
2024-25 சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்திட 255 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கபட்டது.
அறிவிப்பை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து 255 பள்ளிகளில் ஏற்கனவே 10 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அந்த அடிப்படையில் மீதம் இருக்கும் 245 பள்ளிகளில் Elcot நிறுவனம் மூலம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக சுமார் 7 கோடியே 99 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் மொத்தம் 980 சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.