தமிழ்நாடு

2 நாள் நடுக்கடலில் சிக்கிய 6 மீனவர்கள் மீட்பு : கடல் சீற்றத்திற்கு நடுவே திக்.. திக்.. நிமிடங்கள்!

2 நாள் நடுக்கடலில் சிக்கிய 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

2 நாள் நடுக்கடலில் சிக்கிய 6 மீனவர்கள் மீட்பு : கடல் சீற்றத்திற்கு நடுவே திக்.. திக்.. நிமிடங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம், தோனித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் 2 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். புயல் காரணமாக கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதால் இவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மணி கண்ணன், தமிழ், சாமிதுரை, மணிமாறன், தினேஷ், சற்குணனன் ஆகிய 6 மீனவர்கள் லேசான காயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் சித்திரப்பேட்டை அருகில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலிலிருந்து ரசாயனம் இறக்கும் இறங்குதளத்தில் ஏறி உயிர் தப்பினர்.

இவர்கள் கடலில் சிக்கியது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2 நாட்களாக அவர்களை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடல் சீற்றத்துடன் இருந்ததால் அவர்களை மீட்க சிக்கல் நீடித்தது.இதையடுத்து இன்று கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories