தமிழ்நாடு

மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் திருமகனார் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2024) நேரில் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின்னர் மதுரை வந்த முதலமைச்சர் அவர்கள், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் முதலமைச்சர் அவர்கள் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.

banner

Related Stories

Related Stories