தமிழ்நாடு

கூட்டுறவு அங்காடியில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்... எந்தெந்த பொருட்கள், என்னென்ன விலை?

சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறையின் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

கூட்டுறவு அங்காடியில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்... எந்தெந்த பொருட்கள், என்னென்ன விலை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தேனாம்பேட்டை, காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறையின் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

இந்த தீபாவளி சிறப்புத் தொகுப்பில் பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையான தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

=> பிரீமியம் (Premium) தொகுப்பு :

துவரம் பருப்பு - 200 கிராம், உளுத்தம் பருப்பு - 200 கிராம், கடலை பருப்பு - 200 கிராம், வறுகடலை (குண்டு) -100 கிராம், மிளகு - 25 கிராம், சீரகம் - 25 கிராம், வெந்தயம் - 50 கிராம், கடுகு - 50 கிராம், சோம்பு - 50 கிராம், நீட்டு மிளகாய் -100 கிராம், தனியா - 100 கிராம், புளி -100 கிராம், ரவை - 100 கிராம், ஏலக்காய் - 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

=> எலைட் (Elite) - தொகுப்பு :

துவரம் பருப்பு - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 250 கிராம், கடலை பருப்பு - 250 கிராம், வறுகடலை (குண்டு) -200 கிராம், மிளகு - 50 கிராம், சீரகம் - 50 கிராம், வெந்தயம் - 50 கிராம், கடுகு - 50 கிராம், சோம்பு - 50 கிராம், நீட்டு மிளகாய் - 250 கிராம், தனியா - 200 கிராம், புளி - 100 கிராம், ரவை - 100 கிராம், ஏலக்காய் - 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

கூட்டுறவு அங்காடியில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்... எந்தெந்த பொருட்கள், என்னென்ன விலை?

சிறப்புத் தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது, “மக்களுடைய நம்பிக்கையை பெற்று தரமான பொருட்களை குறைந்த விலையில் தரமான நிறுவனம்தான் இந்த கூட்டுறவு சங்கம். அதிரசம். முறுக்கு செய்யும் தொகுப்பு ரூ.190-க்கு அளிக்கின்றனர். சிறிய குடும்பத்தினரும் பெரிய அளவில் சேமிக்கும் தொகுப்பாக அளித்து வருகிறோம். இது குடும்பத் தலைவிகளிடம் மிக பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.

பசுமை பட்டாசுகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பசுமை பட்டாசுகள் விற்பனையை செய்யப்பட்டு வருகிறது. பட்டாசு உள்ளிட்ட மளிகை பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக எளிய முறையில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2 வகையான தொகுப்புகள் பொதுமக்கள் விற்பனைக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முன்னிட்டு காமதேனு கூட்டுறவு சிறப்பாக அங்காடிகள் மூலம் ரூ.20 கோடிக்கான விற்பனை விளக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்.27) மட்டும் சென்னையில் 31 லட்சம் ரூபாய்க்கு பட்டாசு விற்பனையாகியுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் விற்கப்படும் பட்டாசுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. வருங்காலத்தில் நியாய விலை கடைகளில் பட்டாசு விற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.

banner

Related Stories

Related Stories