தமிழ்நாடு

மார்ச் மாதத்திற்குள் 1.19 இலட்சம் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

2030க்குள் குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதிபூண்டு கொண்டுவரப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்திற்குள் 1.19 இலட்சம் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் சமூக சம உரிமை வழங்கிட, பொருளாதார அளவில் பின்தங்கி இருக்கிற மக்களுக்கு, கல்வி உதவி மற்றும் உரிமைத் தொகைகளை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

குறிப்பாக பெண்களின் வளர்ச்சிக்கு புதுமைப்பெண், விடியல் பயணம், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பெண்களின் வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மாநிலமாக விளங்கி வருகிறது.

அவ்வகையில், வறுமையில் துவண்டிருக்கும் வீடில்லாதோருக்கு வீடு வழங்கும் திட்டமாக, 2030க்குள் குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதிபூண்டு கொண்டுவரப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்திற்குள் 1.19 இலட்சம் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

குறிப்பாக, 2030க்குள் சுமார் 8 இலட்சம் கான்க்ரீட் வீடுகள் முடிக்க திட்டமிட்டு, மும்முரமாக செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. அதன் தொடர்ச்சியாக, 2024 - 2025ஆம் ஆண்டுக்கான ஒரு லட்சத்து 19 ஆயிரம் கலைஞர் கனவு இல்லம் கட்டும் பணி 85 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் மதிப்பீடு சுமார் 3.5 லட்ச ரூபாய் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு இல்லாதவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில், சுமார் ஒரு லட்சம் வீடுகள் மறுசீரமைக்க செய்ய 2,000 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து தற்போது அந்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories