தமிழ்நாடு

”ஜனநாயக நாட்டில் மிரட்டலுக்கு இடமில்லை” : ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு பா.ஜ.வினர் கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ஜனநாயக நாட்டில் மிரட்டலுக்கு இடமில்லை” : ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா கூட்டணியால் தங்களது ஆசை நிராசையானதை அடுத்து பா.ஜ.க தலைவர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை ’பப்பு’ என கேலி பேசினார்கள்.

ஆனால், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தைக் கண்டு பா.ஜ.க அஞ்சியது. ’பப்பு’ என்று கேலி செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ.கவிற்கு சவால்விட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள்திணறிவருகிறார்கள்.

மேலும் மக்கள் மத்தியில் ராகுல் காந்தியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க தலைவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியலை அப்பட்டமாக முன்கெடுத்து வருகிறார்கள். தற்போது அவருக்கு ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் பிட்டு கொலை மிரட்டலே விடுத்துள்ளார்.

ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, "நாட்டின் நம்பவர் ஒன் பயங்கரவாதி ராகுல்காந்தி" என வெறுப்புணர்வை தூண்டியுள்ளார். அதேபோல் பா.ஜ.க தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, இந்திரா காந்திக்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் ஏற்படும் என ராகுல் காந்திக்கு அப்பட்டமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதேபோல், உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், "நாட்டின் நம்பவர் ஒன் பயங்கரவாதி" என மக்கள் மத்தியில் பேசியுள்ளார். மேலும் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த 4 பேர் மீதும் டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு பா.ஜ.வினர் கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் ராகுல் காந்தியின் புகழ் வளர்ந்து வருவது சிலரை நிலைகுலைய வைத்துள்ளது. ஜனநாயக நாட்டில் மிரட்டலுக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories