தமிழ்நாடு

சாலை விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா: நொறுங்கிய கார் - நடந்தது என்ன?

சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா: நொறுங்கிய கார் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்துள்ளது.

இதனால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவர் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகர் ஜீவா, அவரது மனைவி இருவரும் வேறு காரில் அங்கிருந்து சென்றனர். நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories