தமிழ்நாடு

கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு திடீரென்று சீல் வைத்த அதிகாரிகள்... - காரணம் என்ன ?

குத்தகை வரி பாக்கியை செலுத்தாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு சீல் வைத்தனர்.

கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு திடீரென்று சீல் வைத்த அதிகாரிகள்... - காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை கிண்டியில் அமைந்துள்ள சென்னை ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு கடந்த 1946-ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் - கிண்டி தாசில்தாரர் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு பதிலளித்த ரேஸ்கிளப் நிர்வாகம், 1946ம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்த பிரிவு ஏதும் இல்லை என விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்புக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு திடீரென்று சீல் வைத்த அதிகாரிகள்... - காரணம் என்ன ?

வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார். தவறினால் மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி 12 ஆயிரத்து 381 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 269 ரூபாயை 2 மாதங்களில் செலுத்தக் கூறி ஒரு மாதத்தில் நோட்டீஸ் அனுப்பவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு திடீரென்று சீல் வைத்த அதிகாரிகள்... - காரணம் என்ன ?

இந்த நிலையில் வரி செலுத்தாமல் இருந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகம் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் காலை சீல் வைத்தனர்.

குறிப்பாக கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவாயிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories