தமிழ்நாடு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : அறுசுவை உணவு விருந்து - பட்டியல் இதோ!

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : அறுசுவை உணவு விருந்து -  பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியுள்ளது. இம்மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முருக பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இம்மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இம்மாநாட்டில் என்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பதை இங்கு பார்ப்போம்:-

இன்று

காலை உணவு:

ஆக்ரா பேடா (இனிப்பு), மைஞர் உளுந்து போண்டா, இட்லி, தக்காளி கத்தரி கொஸ்து,ஆந்திரா பருப்பு பொடி, வெஜ் கிச்சடி,ஆனியன் கேரட் ஊத்தாப்பம்,தேங்காய் சட்னி,மல்லி புதினா சட்னி,சாம்பார்,பூரி ,உருளை ஆனியன் மசால்,பில்டர் காபி.

மதிய உணவு :

லிச்சி சந்தேஷ் (இனிப்பு),பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா,மலபார் கீ ரைஸ்,ஒயிட் குருமா ,ஆனியன் ரைத்தா, சாதம்,ஆந்திரா பருப்பு பொடி நெய், சாம்பார், கத்தரிக்காய் புளிக்குழம்பு, ரசம், தயிர், கேரட் பீன்ஸ் பொரியல்,உருளை கார வறுவல்,பிந்தி பீனட் ப்ரை,அப்பளம்,பருப்பு மசால் வடை ,அடைபிரதமன் பாயாசம்,மாஇஞ்சி தொக்கு

இரவு உணவு :

சாஹி துக்கடா (இனிப்பு), கார்ன் சீஸ் பால்ஸ் ,இட்லி, நெய் பொடி தோசை, தேங்காய் சட்னி, கார சட்னி,சாம்பார்,

சிகப்பரிசி குழாப்புட்டு, கடலை கறி, பஞ்சாமிர்தம், காயின் பரோட்டா, மஸ்ரூம் பள்ளிபாளையம் கிரேவி, கோதுமை உப்புமா தயிர், பனங்கல்கண்டு சுக்குப்பால்

நாளை

காலை உணவு:

பூசணி குல்கந்து அல்வா, உளுந்து வடை இட்லி, கறிவேப்பிலை குழம்பு, மைசூர் மசால் தோசை, தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல் , தேங்காய் சட்னி, காரசட்னி, சாம்பார், இடியாப்பம், வெஜ் ஸ்டியூ, மசாலா பட்டுரா, ஆலு சென்னா மசாலா, பில்டர் காபி

மதிய உணவு :

ரஃப்டி மால்பூவா, ஆம்பூர் கறிபலா தம் பிரியாணி, ஆனியன் ரைத்தா, சாதம், சாம்பார், வாழைப்பூ சுண்டக்காய் வத்தக்குழம்பு, மைசூர் மசால் ரசம், தயிர், அவரை பொரியல், சேனை சாப்ஸ், வெண்டை புளிமண்டி ,அப்பளம், மைசூர் ஆனியன் போண்டா, பாசிப்பருப்பு பலாப்பழ பாயாசம், மாஇஞ்சி தொக்கு

இரவு உணவு:

பனைவெல்லம் மைசூர்பா, ஆனியன் சமோசா, இட்லி, பூண்டு தேங்காய்ப்பால் குழம்பு, செட் தோசை ,வடகறி,பட்டர் புல்கா, வெஜ் கடாய் கிரேவி,குஜராஜ் கிச்சடி - கடி, தேங்காய் சட்னி ,ப்ரூட் தயிர் சேமியா, மாஇஞ்சி தொக்கு, சுக்குமல்லி காபி

    banner

    Related Stories

    Related Stories