தமிழ்நாடு

”திராவிட மாடல் அரசு உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

அரசு அலுவலர்களுக்கு இந்த அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் அரசு உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் 16 ஆம் ஆண்டு வைர விழா மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"தி.மு.க எமர்ஜென்சியை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசின் பல ஒடுக்குமுறைகளை சந்தித்துள்ளது. இப்போதும் சந்தித்து வருகிறது. தேர்தலில் வெற்றியையும், தோல்வியையும் பார்த்து இருக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் ஆட்சியில் கழகத்தை அமர்தியவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர்.

அரசின் எல்லா துறைகளிலும் தாய் துறை என்றால் அது வருவாய்த்துறைதான். அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக இருப்பது வருவாய்த்துறை அலுவலர்களாகிய நீங்கள்தான். பேரிடர் காலத்தில் அரசுக்கும் மக்களுக்கும் உதவக்கூடிய வகையில் வருவாய் பேரிடர் துறை அலுவலர்களாகிய நீங்கள்தான் இருக்கிறீர்கள். எனவே உங்களின் ஒத்துழைப்பு இந்த அரசுக்கு மிக மிகு தேவையானது.

அரசு அலுவலர்களுக்கு எப்போதும் திராவிட மாடல் அரசு பாதுகாப்பாக இருக்கும். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உங்கள் அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி கொடுப்பார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories