தமிழ்நாடு

ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ்.. மீட்டெடுத்த தூய்மை பணியாளருக்கு மேயர் பிரியா பாராட்டு !

ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ்.. மீட்டெடுத்த தூய்மை பணியாளருக்கு மேயர் பிரியா பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை விருகம்பாக்கம் பிவி ராஜமண்ணார் சாலையில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று தேவராஜ் வீட்டில் இருந்த வைர நெக்லஸ் காணாமல் போயுள்ளது. இதனால் அவர் தனது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அலசி ஆராய்ந்து பார்த்தும், நெக்லஸ் கிடைக்கவில்லை.

ஒருவேளை தெரியாமல் கீழே விழுந்து வீட்டை சுத்தம் செய்யும்போது, குப்பையோடு குப்பையாக சென்றிருக்குமோ என்று எண்ணிய தேவ்ராஜ், தனது வீட்டின் அருகே குப்பை போடும் தொட்டியில் தேட முடிவு செய்தார். எனவே அவர் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பசேர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறினார்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ்.. மீட்டெடுத்த தூய்மை பணியாளருக்கு மேயர் பிரியா பாராட்டு !

இதையடுத்து உர்பசேர் நிறுவனத்தின் சார்பில் வந்த தூய்மை பணியாளரும், குப்பை வாகன டிரைவருமான அந்தோணி சாமி அங்கு வந்து குப்பை தொட்டியில் வைர நெக்லஸை தேடினார். தொடர்ந்து குப்பைகளை அகற்றி தேடி பார்க்கையில் அந்த வைர நெக்லஸ் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.

அந்த நெக்லஸை கண்டுபிடித்த தூய்மை பணியாளர் அந்தோணி சாமி, அதன் உரிமையாளர் தேவராஜிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த நெக்லஸை வாங்கிக்கொண்ட அவர், தூய்மை பணியாளர் மற்றும் அங்கு வந்திருந்த வார்டு சூப்பர்வைசர் அஜய் மற்றும் யூனிட் அதிகாரி ஜோசப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தூய்மை பணியாளரின் இந்த செயலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ்.. மீட்டெடுத்த தூய்மை பணியாளருக்கு மேயர் பிரியா பாராட்டு !

மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் அந்தோணி சாமியை நேரில் அழைத்து, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

சென்னை ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உர்பேசர் நிறுவன மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், திட்ட மேற்பார்வையாளர் குருசாமி, சட்டக்குழுத் தலைவர் சூரிய பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories