தமிழ்நாடு

”எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படுவார்” : அமைச்சர் ரகுபதி பேட்டி!

ரூ.100 கோடி மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படுவார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

”எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படுவார்” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் நமது காவல்துறை அவரை கண்டுபிடித்து நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ரகுபதி, ”ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய சட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மேலும் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு ஆணையம் அமைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க ஆபத்தான சூழ்நிலைகளை சந்திக்கப்போகிறது என்று கூறினேன். இப்போது அது நடந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.கவின் தொண்டர்கள்தான் பரிதாப நிலையில் இருக்கிறர்கள்.

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் நமது காவல்துறை அவரை கண்டுபிடித்து நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories