தமிழ்நாடு

”விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் அண்ணாமலை” : ஜோதிமணி MP குற்றச்சாட்டு!

விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

”விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் அண்ணாமலை” : ஜோதிமணி MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பின்னணியில் இருப்பது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் என ஜோதிமணி MP குற்றம்சாட்டியுளளார்.

இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி MP,”பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமோ, அரசியல் முதிர்ச்சியோ கிடையாது. அரசியல் கட்சி தலைவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவது மட்டுமே அவரது வேலை. மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது கிடையாது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கு என்பது சட்டப்படி மிக கடுமையான குற்றச்சாட்டு. ரூ.100 கோடி அளவில் நில மோசடி செய்துள்ளார்.இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் இருக்கிறார்” என தெரிவிதுள்ளார்.

banner

Related Stories

Related Stories