தமிழ்நாடு

பெட்டிக்கடையில் ரூ.15000 பணம் பறிப்பு : பா.ஜ.க நிர்வாகி கைது!

கோவையில் பெட்டிக்கடையில் ரூ.15000 பணம் பறித்த பா.ஜ.க நிர்வாகியை போலிஸார் கைது செய்தனர்.

பெட்டிக்கடையில் ரூ.15000 பணம் பறிப்பு : பா.ஜ.க நிர்வாகி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராகவும் இருந்து உள்ளார்.

இந்நிலையில் பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக் கூறி பெருமாள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேரூர் படித்துறை அருகே உள்ள பெட்டிக்கடை வைத்துள்ள வெற்றிவேல் என்பவரிடம் குட்கா விற்பனை செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் ரூ. 15,000 பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் அவர் மீது சந்தேகம் அடைந்த வெற்றிவேல், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் பா.ஜ.க நிர்வாகி பெருமாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories