தமிழ்நாடு

3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

எரிசக்தித்துறையில் 19 அறிவிப்புகளையும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையில் 4 அறிவிப்புகளையும், மனித வள மேலாண்மைத் துறையில் 5 அறிவிப்புகளையும் வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துறைவாரியான அமைச்சர்கள், தங்களது மானிய கோரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், இன்று (26.06.24), நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கள் தென்னரசு முக்கிய அறிவிப்புகளை, மானியக் கோரிக்கைகள் வழி வெளியிட்டார்.

அவ்வகையில், எரிசக்தித்துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளையும், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில் 4 அறிவிப்புகளையும், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் 5 முக்கிய அறிவிப்புகளையும் முறையே, சட்டப்பேரவையில் அறிவித்தார்.

எரிசக்தித்துறையின் முக்கிய அறிவிப்புகளாக,

1. ரூ. 200 கோடி மதிப்பீட்டில் புதிய/ கூடுதலாக விநியோக மின்மாற்றிகள் நிறுவுதல்!

தரமான மின்சார விநியோகத்திற்காக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திறன்களைக் கொண்ட 2,500 புதிய/ கூடுதல் மின்மாற்றிகள், ரூ. 200 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

2. ரூ. 211 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய துணை மின் நிலையங்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் புதிய 230 கி.வோ துணை மின் நிலையமும், திருச்சி மாவட்டத்தில் 110 கி.வோ துணை மின் நிலையமும், ரூ. 211 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

3. ரூ.217 கோடி மதிப்பீட்டில் 19 திறன் மின்மாற்றிகள் மேம்பாடு!

அதிகரித்து வரும் மின் தேவையினால், 19 திறன் மின்மாற்றிகள் (Power Transformers),ரூ.217 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

4. விரிவான எரிசக்தி திறன் மேம்பாட்டு இயக்கம்!

மின்சார சேமிப்பிற்காகவும், எரிசக்தி திறனை மேம்படுத்துவதற்காகவும், வீட்டு வசதி, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறைகளில், “விரிவான எரிசக்தி திறன் மேம்பாட்டு இயக்கம்” செயல்படுத்தப்படும்.

5. பசுமை எரிசக்தி - மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்!

சூரிய எரிசக்தி, காற்றாலை மற்றும் இதர பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் 2000 மெகாவாட் பசுமை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

6. மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியினை அதிகரிப்பதற்காக, காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும்.

7. ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மின்சாரம் எச்சரிக்கை உணரி சாதனங்கள்!

களப்பணியாளர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் கட்டமைப்பு பாதுகாப்பாக உள்ளதா என கண்காணிக்கவும், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மின்சாரம் எச்சரிக்கை உணரி சாதனங்கள் வழங்கப்படும்.

8. ரூ. 25 கோடியில் மின்விநியோக பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மேம்பாடு!

விவசாயிகள் உயிர் பாதுகாக்கவும், தேவையற்ற மின்தடைகளை தவிர்க்கவும், சிலிகான் ஓவர்ஹெட் லைன் இன்சுலேஷன் ஸ்லீவ்ஸ் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

9. ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மின் காப்பு பணிகள்!

மின் தடையை தடுக்கவும், வனப்பகுதிகளில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்கவும், ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மின் காப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

10. ரூ.75 கோடி மதிப்பீட்டில் மின் கட்டமைப்பு மேம்பாடு!

ரூ.75 கோடி மதிப்பீட்டில், மூன்று புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் நிறுவுதல் மற்றும் ஆறு 33/11 கி.வோ துணை மின் நிலையங்களின் மின் மாற்றிகள் திறன் மேம்படுத்துதல் பணி முன்னெடுக்கப்படும்.

11. ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றிகள்!

அடர்ந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளில், ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றிகள் நிறுவப்படும்.

3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

12. ரூ. 4.8 கோடி மதிப்பீட்டில் பட்டயப் பொறியாளர்களுக்கு பயிற்சி!

தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ், 500 பட்டயப் பொறியாளர்களுக்கு, ஒரு ஆண்டு கால தொழில் பழகுநர் பயிற்சி வழங்க, ரூ. 4.8 கோடி ஒதுக்கீடு.

13. ரூ. 1.5 கோடி செலவில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி!

தமிழ்நாடு மின் உற்பத்தி பணியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்த, ரூ. 1.5 கோடி செலவில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

14. தேரோடும் வீதிகளில் புதைவட மின் கம்பிகள்!

தமிழ்நாடு முழுக்க, 11 திருத்தலங்களிலுள்ள தேரோடு வீதிகளில் மேலே செல்லும் மின்கம்பிகள் அனைத்தும் புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும்.

15. சூரியசக்தி மேற்கூரை நிறுவுத்திறனை கண்டறிய இணையவழி மென்பொருள்!

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தனி மற்றும் அடுக்குமாடி வீடுகளில், சூரியசக்தி மேற்கூரை நிறுவுத்திறனை கண்டறிய இணையவழி மென்பொருள் உருவாக்கப்படும்.

16. சுமை ஏற்று திறன் விதிமுறைகள் திருத்தம் செய்தல்!

அதிக அளவில் மாநில மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு ஏதுவாக, மின் கடத்தல் வழித்தடங்களில் சுமை ஏற்று திறன் விதிமுறைகள் திருத்தப்படும்.

17. நீரேற்று புனல் மின் திட்ட வளர்ச்சிக்கு புதிய கொள்கை!

புதிய நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும்.

18. புதிய செறிவூட்டப்பட்ட நிலக்கரி எரிப்பான்கள் நிறுவுதல்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு 4-ன் கொதிகலனில் 8 புதிய செறிவூட்டப்பட்ட நிலக்கரி எரிப்பான்கள் நிறுவுதல் பணிக்கு, ரூ. 65 இலட்சம் ஒதுக்கீடு.

19. CAAQMS நிலையத்தை தரவு பதிவேற்ற வசதியுடன் நிறுவுதல்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், தொடர்ச்சியான சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தை (CAAQMS) தரவு பதிவேற்ற வசதியுடன் நிறுவுதல்பணிக்கு, ரூ. 60 இலட்சம் ஒதுக்கீடு.

3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

மனித வள மேலாண்மைத் துறை முக்கிய அறிவிப்புகளாக,

1. ரூ. 1 கோடி மதிப்பீட்டில், அலுவலகர்களுக்கு சிறப்புப் பயிற்சி!

தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு உயர் அலுவலகர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பீட்டில், சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

2. தொகுதி -1 அலுவலகர்களுக்கான பொதுவான அடிப்படைப் பயிற்சித் திட்டம்!

TNPSC வழி பணியமர்த்தப்படும், தொகுதி -1 அலுவலகர்களுக்கு, அவர்களது துறை சார்ந்து, பொதுவான அடிப்படைப் பயிற்சித் திட்டம் வழங்கப்படும்.

3. சட்டம் மற்றும் பயிற்சிப் பிரிவு!

அரசுப் பணியாளர்களின் பணி தொடர்பான பொருண்மைகளில் நீதிமன்றங்களால் வழங்கப்படும், தீர்ப்புகளை தொகுத்தல், அப்பொருண்மைகளை கையாளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு, சட்டம் மற்றும் பயிற்சிப் பிரிவு தொடங்கப்படும்.

4. தகவல் பகுப்பாய்வுப் பயிற்சி!

அரசு திட்டங்களை செம்மைப்படுத்த, அரசு அலுவலகர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) குறித்து, சிறப்பு தகவல் பகுப்பாய்வுப் பயிற்சி அளிக்கப்படும்.

5. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள்!

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களைக் கழித்து, ரூ. 2.58 கோடியில், 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 44 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முக்கிய அறிவிப்புகளாக,

1. தமிழ்நாடு பெரு நிறுவன சமூக பொறுப்பு இணைய தளம் (TNCSR)!

ஐ.நா வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட மையம் மூலம் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில், தமிழ்நாடு பெரு நிறுவன சமூக பொறுப்பு இணைய தளம், ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

2. நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு (LUIS) உருவாக்கம்!

மாநிலத்தின் நிலப்பயன்பாட்டு முறைகளுக்கான முன்கணிப்பு மாதிரி கருவியான, நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு (LUIS) உருவாக்கப்படும்.

3. பொது மேலாண்மையில் 6 மாத சான்றிதழ் படிப்பினை!

MIDS, MSE, IIT போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, மாநில திட்டக்குழு சார்பில், பொது மேலாண்மையில் 6 மாத சான்றிதழ் படிப்பினை, ஆண்டொன்றிற்கு ரூ. 1.02 கோடி மதிப்பீட்டில், தொடங்கப்படும்.

4. பயிர் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு!

மாவட்ட அளவிலான பயிர் பரப்பளவை மதிப்பிடுவதற்கு அதிநவீனத் தொலை உணர்தல் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயிர் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு.

banner

Related Stories

Related Stories