தமிழ்நாடு

நீட் கருணை மதிப்பெண் மாபெரும் மோசடி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் விவகாரத்தில் முதல் முதலில் வெளிப்படுத்தியது திமுக தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் கருணை மதிப்பெண் மாபெரும் மோசடி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு தேவையில்லை என ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”2017 ஆம் ஆண்டு தொடங்கி நீட் தேர்வு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து நீட் தேர்வை தி.மு.க எதிர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வு வந்த நாள் முதல் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சி அமைந்த உடன் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து அவர் அளித்த அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம். குடியரசு தலைவருக்கு அனுப்பியும் இதுவரை தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவில்லை.

இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் இதில் தான் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.‌ அதில் பெற்ற மதிப்பெண்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு கூடுதல் மதிப்பெண்ணாக கொடுக்கப்பட்டதிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேசியத் தேர்வு முகமை கருணை அடிப்படையில் மதிப்பெண் தரப்பட்டுள்ளது என கூறியது.

நேர பற்றாக்குற குறையும் காரணமாக மதிப்பெண் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்க படுமே ஆனால் மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி 5 20 மணி வரை தேர்வு நடைபெறும். இதில் எப்படி நேர பற்றாக்குறை ஏற்படும் இரண்டு மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லாத பட்சத்தில் எப்படி ஏறப்பட்ட குறை ஏற்பட்டு கூடுதல் மதிப்பெண் வழங்கினார்கள் என்பது கேள்வியாக உள்ளது.

இது மிகப்பெரிய அளவிலான மோசடி. 1563 மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் மட்டும் 6 பேர் முழு மதிபெண்கள் எடுத்துள்ளனர். அடுத்தடுத்து வரிசை எண் கொண்ட ஆறு பேர் எப்படி ஒரே மாதிரி முழுமதி பெண்கள் பெற முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

இது போன்ற குழப்பமான பல மோசடிகளுக்கு வழிவகை செய்யும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கருணை மதிப்பெண் கூட எந்த மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும் என தகுதியை நிர்ணயித்து தான் வழங்குகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். தேசிய தேர்வு முகமை மோசடி செய்துள்ளது என குற்றம் சாட்டி உள்ளீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு அதற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து நாங்கள் அதை வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இந்தக் கருணை மதிப்பெண் விவகாரத்தில் முதல் முதலில் வெளிப்படுத்தியது திமுக தான். அதன் அடிப்படையில் தான் மற்ற மாநிலங்களும் புரிந்து கொண்டு தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். குளறுபடிகளின் உச்சம், விதிமீறுகளின் உச்சம், சட்ட மீறல்களின் உச்சமாக இந்த நீட் தேர்வு இருப்பதால் முற்றிலுமாக இதை ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories