தமிழ்நாடு

குவைத் தீ விபத்து : தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக தகவல் - அமைச்சர் செஞ்சி மஸ்தாஸ் !

குவைத் தீ விபத்து : தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக தகவல் - அமைச்சர் செஞ்சி மஸ்தாஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மங்கஃப் என்ற நகரில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் இங்கு நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் (அங்குள்ள நேரப்படி) கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீயானது சில மணித்துளிகளிலேயே மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். எனினும் அங்கிருந்த புகைமூட்டத்தில் பலர் மூச்சுத்திணறி உடல்கருகி பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த விபத்து குறித்து பேசிய வெளிநாட்டுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கவும் அங்கு இருந்த உடலை தமிழகம் கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

குவைத் தீ விபத்து : தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக தகவல் - அமைச்சர் செஞ்சி மஸ்தாஸ் !

தீ விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தீ விபத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பாக வெளிநாடு வாழ் நலத்துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

.தூரதரக மூலமாக இறப்பு அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எதுவும் வரவில்லை என்றும் அங்கு உள்ள தமிழ் சங்கங்கள் அளித்துள்ள தகவல்களின்படி தமிழகத்தைச் சேர்ந்த ராம கருப்பண்ணன், வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரீஃப்,புனாப் ரிச்சர்ட் ராய்,உள்ளிட்ட 5 பேர் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரபூர்வமான அடையாளம் காட்டப்பட்ட பிறகு இறந்தவர்கள் குடும்பத்திற்கு உதவிகள் செய்ய உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories