தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்குப்பதிவு? - முழு விவரம் இங்கே!

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்குப்பதிவு? - முழு விவரம் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, உடல்நலக்குறைவால் ஏப். 6 ஆம் தேதி காலமானார். இவரது மறைவு குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 21ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ம் தேதி நடைபெறும் என்றும், ஜூன் 26ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும், ஜூலை 15ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவிற்கு வரும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி தொகுதியின் சேர்த்து 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories