தமிழ்நாடு

கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி : நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு!

சொந்த காலில் நின்று வருமானம் ஈட்ட வேண்டும் என்ற மாற்றுத்திறனாளியின் ஆசையை அமைச்சர் கே.என்.நேரு நிறைவேற்றி கொடுத்துள்ளார்.

கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி : நிறைவேற்றி கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அபினியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளியான இவரால் எழுந்து கூட நடக்க முடியாது. இருந்தும் சொந்த காலில் நின்று வருமானம் ஈட்ட வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்துள்ளது.

இதையடுத்து கடந்த மே 31 ஆம் தேதி அமைச்சர் கே.என். நேருவை மாற்றுத்திறனாளி செல்வம் நேரில் சந்தித்துள்ளார். அப்போது, "தான் சுயமாக உழைத்து வாழ வேண்டும். தனக்கு சொந்த இடத்தில் ஜெராக்ஸ் கடை வைக்க ஆசைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.

பின்னர், உங்களது ஆசையை நான் நிறைவேற்றுகிறேன் என அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.1 லட்சம் மதிப்பில் கலர் பிரிண்டர், ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்ட உபகரணங்களை தனது சொந்த செலவில் அமைச்சர் கே.என்.நேரு வழங்கியுள்ளார்.

சொந்த காலில் நின்று வருமானம் ஈட்ட உதவி செய்துள்ள அமைச்சர் கே.என்.நேருவுக்கு செல்வம் மகிழ்ச்சியுன் நன்றி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories