தமிழ்நாடு

மகாத்மா காந்தி குறித்து மோடியின் சர்ச்சை பேச்சு : காந்திஜியை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பது ஏன்?

பாஜகவும் ஆர்.எஸ்.எஸூம் காந்தியை இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம் காந்தியின் சித்தாந்தம். அவரின் சித்தாந்தம் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரிவினை அரசியலுக்கு எதிராகவே இருந்துள்ளது.

மகாத்மா காந்தி குறித்து மோடியின் சர்ச்சை பேச்சு : காந்திஜியை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பது ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"ரத்தமும், சதையுமாக இருக்கும் இப்படிபட்ட ஒருவர் இப்பூமியில் வாழ்ந்தார் என்பது இளைய தலைமுறையினரால் நம்ப முடியாமல் போகலாம்.” என்று மகாதமா காந்திக்கு புகழாரம் சூட்டியவர் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின். அதுமட்டுமல்லாமல் மாறி வரும் சூழலில் புதிய தலைமுறையினருக்கு மகாத்மா காந்தியை புரிந்து கொள்ள முடியாமல் கூட போகலாம் என்ற அச்சத்தையும் அவர் விளக்கிருக்கிறார்.

உலக வரலாற்றில் உரிய லட்சியங்களுக்காக போராடிய மகத்தான தலைவர்களின் முதன்மையானவர் மகாத்மா காந்தி. இந்தியாவின் தேச பிதா என அழைக்கப்படும் அளவிற்கு காந்தியை இந்தியா நேகிக்கிறது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றத்துடிக்கும் சித்தாந்தம் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை ஆட்சி செய்யவதே வரலாற்று பிழையாகும். அதுமட்டுமால்ல, உயரிய லட்சியங்களுக்காகப் போராடி, மக்கள் ஒற்றுமையை உரக்க முன்மொழிந்த மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்களிடம் நாடு மாட்டியிருக்கிறது என்பதை வேதனைக்குறியது.

பாஜக ஆட்சியில் காந்தியின் சித்திரத்தை அடையாளப் பூர்வமாக நிறம் மாற்றுவதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. காந்தியை கொன்றவனுக்கு கோயில் கட்டுவதும், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை அந்த குற்றவாளிக்கு வழங்க வேண்டும் என்கிற கூக்குரல் எழுவதையும், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சாவர்க்கரின் படம் திறக்கப்பட்ட நிகழ்வுகளை பார்க்கும் அவலமும் நேர்ந்துள்ளது.

மகாத்மா காந்தி குறித்து மோடியின் சர்ச்சை பேச்சு : காந்திஜியை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பது ஏன்?

இதுபோதாது என்று பாஜக மூத்த நிர்வாகிகள் தொடங்கி ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் என இந்துத்துவா வாதிகள் காந்தி மீதான அவதூற்றை வாரி இறைத்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது மோடியும் இணைந்துள்ளார். தோல்வி பயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை வசைப்பாடிய மோடி, இப்போது மகாத்மா காந்தியையும் வசைப்பாடியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, “1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன், யாருக்கும் மகாத்மா காந்தியை தெரியாது” என பேசியுள்ளார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

"ஒட்டுமொத்த அரசியல் அறிவியலையும் கற்ற ஒரு மாணவரால் தான் காந்தி படத்தை பார்த்து மகாத்மா காந்தியை பற்றி தெரிந்துகொள்ள முடியும்." என மோடியின் இத்தகைய பேச்சை ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். மேலும் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்க பார்க்கிறார். 1982-க்கு முன் மகாத்மா காந்தி அங்கீகரிக்கப்படாத உலகில், வெளியேறும் பிரதமரான மோடி வாழ்கிறார் போலும்.

மகாத்மா காந்தி குறித்து மோடியின் சர்ச்சை பேச்சு : காந்திஜியை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பது ஏன்?

வாரணாசி, டெல்லி, அகமதாபாத்தில் காந்திய நிறுவனங்களை அழித்தது மோடி அரசுதான். மகாத்மா காந்தியின் தேசியத்தை புரிந்து கொள்ளாததுதான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களின் அடையாளம். அவர்களின் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சூழல்தான் நாதுராம் கோட்சே, காந்தியைக் கொல்ல வழிவகுத்தது. 2024 தேர்தல் மகாத்மா பக்தர்களுக்கும் கோட்சே பக்தர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை. வெளியேறும் பிரதமர் மோடி மற்றும் அவரது கோட்சே பக்தர் சகாக்களின் தோல்வி உறுதியாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறியது போல், காந்தியின் பெயரில் செயல்பட்டுத்தப்பட்ட பல திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு முடங்கியது. அதேபோல், வாரணாசி, டெல்லி, அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த காந்தி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்காமல், அவற்றை முடக்கியுள்ளது. அதேபோல் பாடத்திட்டங்களில் இடம் பெற்றிருந்த மகாத்மா காந்தி வரலாற்றை திரித்து, மறைக்கும் வேலையையும் பாஜக ஆளும் மாநில அரசுகள் செய்து வருகிறது.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் காந்தியை இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம் காந்தியின் சித்தாந்தம். அவரின் சித்தாந்தம் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரிவினை அரசியலுக்கு எதிராகவே இருந்துள்ளது. தேர்தல் நேரங்களில் மோடி, காந்தியை இழுப்பதுதன் மூலம் ஓரளவுக்கு தனது வாக்கு வங்கியை காப்பாற்ற மோடி நினைக்கிறார்.

banner

Related Stories

Related Stories