தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி வைத்த கோரிக்கை - இரண்டே நாளில் நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு - குவியும் பாராட்டு!

மாற்றுத்திறனாளி இளைஞரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது நாளே வீடுதேடி சென்று பட்டா வழங்கியும், இரண்டு மாதத்தில் வீடு கட்டிக்கொடுக்கவும் அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி வைத்த கோரிக்கை - இரண்டே நாளில் நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சிக்குப்பட்ட கரும்பாக்கம் கிராமத்தை சார்ந்தவர் 39 வயதாகும் இளைஞர் சத்தியமூர்த்தி,இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் முதுகுதண்டுவடம் பாதித்து படுத்த படுக்கையானார்.

இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள நிலையில், இவரின் மாமனார் குடும்பத்தினர் இவரது மனைவி மற்றும் இவரது இரண்டு குழந்தைகளை தாய் வீட்டிற்கு பிரித்து அழைத்து சென்றனர். தாயின் அரவணைப்பில் இருந்த சத்தியமூர்த்தி தனக்கு வீடு இல்லை என்று வீட்டுமனை பட்டா வழங்கிடவும் வீடு கட்டிதர வேண்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜூக்கு வாட்ஸ் ஆஃப் மூலம் திங்கள் கிழமை தகவல் அளித்திருந்தார்.

இந்த தகவலின் அடிப்படையில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிலையில், வாட்ஸாப் மூலம் மனு அளித்த முதுகுத்தண்டுவடம் பாதித்த இளைஞர் சத்தியமூர்த்தியை நேரில் பார்வையிட்டு, அவருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் அவருக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளி வைத்த கோரிக்கை - இரண்டே நாளில் நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு - குவியும் பாராட்டு!

மேலும் இளைஞரிடம் அவரின் குறைகளை கேட்டறிந்து ஆட்சியர், அவருக்கு இரண்டு மாதத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டு,சத்தியமூர்த்திக்கு வீடுகட்ட ஒதுக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி இளைஞர்,தனக்கு வீடு இல்லாததால் தான் தன் மனைவி மற்றும் தன்னுடைய குழந்தைகள் தன்னுடன் இல்லையென்றும்,இனி அந்த கவலை இல்லையென்றும்,இனி அவர்கள் வந்துவிடுவார்கள், அதற்காக உதவிய மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories