தமிழ்நாடு

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் : உடனே நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு - நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் : உடனே நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த போரூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பரணிபுத்தூர் பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு பட்டா மாற்றம் செய்யாமல் அவரது மனு கிடப்பில் இருந்துள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், ”லட்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தரப்படும்” என கூறியுள்ளார்.

இதையடுத்து செல்வராஜ், பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் லட்சம் கேட்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் செல்வராஜை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, தன்னுடைய கோரிக்கையை உடனே நிறைவேற்றி கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து செல்வராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் லட்சம் கேட்ட பரணிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூகவலைதளத்தில் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories