தமிழ்நாடு

நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!

நாசா அறிவித்தபடி சர்வதேச விண்வெளி மையத்தை சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களால் மிக எளிதாக காண முடிந்தது.

நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்கலமாகும். 1998 ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்டவை இணைந்து உருவாக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 109 மீட்டர் நீளம் கொண்டது, அதன் அகலம் 73 மீட்டர்கள். 450 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 93 நிமிடத்திற்கு ஒரு முறையும் பூமியை சுற்றி வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 15.5 முறை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 400 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகிறது.

நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!

இந்த சர்வதேச விண்வெளி மையம் உலகில் நிகழ்வும் பல்வேறு பூமியில் நிகழ்வு மட்டும் இன்றி வானியல் நிகழ்வையும் ஆய்வு செய்து வருகிறது. இந்த சர்வதேச விண்வெளி மையத்தை இன்று சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காண முடியும் என நாசா தெரிவித்திருந்தது.

நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!

இன்று இரவு சரியாக 07.09 மணியிலிருந்து ஏழு நிமிடங்கள் வரை இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என்றும் தென்மேற்கில் தொடங்கி வட கிழக்கில் மறையும் என்றும், வெண்புள்ளியாக இந்த சர்வதேச விண்வெளி மையம் காட்சியளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரவு சரியாக 7.09 மணியளவில் சர்வதேச விண்வெளி மைய்யம் பூமியை சுற்றியதை காண முடிந்தது.

இதனை மக்கள் பலரும் வீடியோவாகவும் ஃபோட்டோவாகவும் எடுத்து தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories