தமிழ்நாடு

”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!

திராவிட மாடல் அரசின் 4 ஆம் ஆண்டில் தொடக்கத்திற்கு தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்றாண்டு முடிந்து 4ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூன்றாண்டு கால ஆட்சி நிறைவுற்று நான்காம் ஆண்டில் இன்று (7.5.2024) அடியெடுத்து வைக்கிறது. தி.மு.க. அரசின் இந்த மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

மகளிரின் தற்சார்பு வாழ்க்கைக்கான அடித்தளம், புத்துணர்வு பெறும் வாழ்விடங்கள், கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்குக் காலையில் உணவு, கல்வியில் உயர்வு, வெளிநாட்டு உயர் கல்விக்கு உதவி, மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி - தன் துறையில் முதல்வனாகும் புதுமுயற்சி.

கடைக்கோடி தமிழருக்கும் நலவாழ்வு புத்துயிர் பெறும் கிராமங்கள், விவசாயிகளுக்கு மின் இணைப்பு - நிலங்களில் சாகுபடி அதிகரிப்பு, மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் மலர்ச்சி, நெகிழ்ச்சியுறும் நெசவாளர்கள், இல்லம் தேடி கல்வி கற்றல் இடைவெளியை குறைக்கும் கருவி என்ற பல்வேறு செயல் திட்டங்களால் தி.மு.க. அரசு தனது சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

தொழில் துறையில் திராவிட நாயகரின் ஆட்சி செய்த புரட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப் பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கு வதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

74,757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப் பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவைகள் அல்லாமல், கடந்த மூன்றாண்டுகளில் மாண் புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள், படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவற்றுள் முக்கிய மானவை:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ.1,000/- பெறுகின்றனர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

புதுமைப் பெண் திட்டத்தில் 2,72,216 கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர். விடியல் பயணம் திட்டத்தில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் 2 இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு 12 இலட்சம் குழுக்கள் பயன்! விவசாயிகளுக்கு 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு கூடுதலாக 2,99,384 ஏக்கரில் பயிர் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1,501 கோடி மதிப்பீட்டில் 4,812 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.“நான் முதல்வன் திட்டத்தில்” பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 28 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 26 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டு 28 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.! ரூ.4,818 கோடி கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 13 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5,996.53 கோடி மதிப்பிலான6,800.68 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறைவான நேரத்தில் நிறைவான சேவைகளுக்காக 3 ஆண்டுகளில் 30,000 இ-சேவை மய்யங்கள் தொடங்கப் பட்டு பொதுமக்களுக்குப் பயனளிக்கின்றன.

2600 ஆண்டு தமிழர் வரலாற்றை உயர்த்திப் பிடிக்கும் கீழடி அகழாய்வுப் பணியில் கிடைத்துள்ள பொருள்களைப் பாதுகாக்கும் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் - ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மேம்படுத்தவும் ரூ.200 கோடியில் 1,769 பணிகளை நிறைவேற்றியுள்ளது.

ரூ.2,358.53 கோடி மதிப்பீட்டில் 44 அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் (Polytechnic); ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களும் (ITI) தொழில் 4.0 அளவிற்குத் தரம் உயர்த்தப்படுகின்றன.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 970 பயனாளிகளுக்கு ரூ.131.91 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காக்க 62,229 பயனாளிகளுக்கு ரூ.406.22 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 28,601 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 150 யூனிட் என்பது 300 யூனிட் எனவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் என்பது 1000 யூனிட் எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு 2,38,163 நெசவாளர் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.

காலை உணவுத் திட்டம்-சிறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தியுள்ள காலை உணவுத் திட்டத்தின் சிறப்புகளை, தெலங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல் படுத்துகிறது. தெலங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த +2 தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். காலை உணவுத் திட்டம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது x வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதே போல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திட பரிசீலித்து வருகின்றன.

அரசு பணியாளர்கள் தேர்வு

ரூ.1.501 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட முதல்- அமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட் டம்மூலம் 4,812 கி.மீ.சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டம்மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்ப் புதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்லித் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 27,858 அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் மூன்றாண்டுகளாகப் படைத்துவரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப் படுகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திட்டங்களை அறிந்து வியந்து அவற்றைத் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்திடவும் முனைப்புடன் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாதனைச் சிகரங்கள் படைத்த, படைத்துவரும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நன்றி உணர்வோடு நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். பணிகள் தொடரட்டும்! பாராட்டுகள் - வாழ்த்துகள்!

banner

Related Stories

Related Stories