தமிழ்நாடு

10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? : பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? : பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் மார்ச் 26 தொடங்கி ஏப்.8 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் பரவியது.

இதையடுத்து திட்டமிட்டபடி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ”10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 ஆம் தேதி மற்றும் மே 10 ஆம் தேதி வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories