தமிழ்நாடு

”தேர்தலுக்கு பிறகு அதிமுக முகவரி இல்லாமல் காணாமல் போகும்” : கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!

சந்தர்ப்பவாத நிலையில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க தேர்தலுக்கு பின் முகவரி இல்லாமல் போகும் என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

”தேர்தலுக்கு பிறகு அதிமுக முகவரி இல்லாமல் காணாமல் போகும்” : கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், "காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் அம்பேத்கர்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்குத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதனை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.

பாட்டாளி மக்கள் கட்சியினரைப் பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது சாதியை ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடிக்கும் வருணா சிர தத்துவம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவோடு எப்படி கூட்டணி வைத்திற்கள். இந்த கூட்டணி இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அ.தி.மு.க- பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க வை பற்றியோ? மோடியைப் பற்றியோ? மோடியின் பத்தாண்டுக் கால அவலத்தைப் பற்றியோ? அவரது ஆட்சியில் ஏற்பட்ட சீரழிவுகள் பற்றியோ? பேசுவதற்கு எடப்பாடி தயாராக இல்லை அதிமுகவும் தயாராக இல்லை. எனவே அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாகக் கூட்டணி உள்ளார்கள். சந்தர்ப்பவாத நிலையில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க தேர்தலுக்குப் பின் முகவரி இல்லாமல் போகும்.

இந்தியா கூட்டணி மகத்தான கூட்டணி, இந்தியா முழுவதும் இருக்கின்ற இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories