தமிழ்நாடு

”10 ஆண்டுகளாக பொய் மட்டுமே பேசும் பிரதமர் மோடி” : தயாநிதி மாறன் MP விமர்சனம்!

10 ஆண்டுகலாக பிரதமர் மோடி பொய் மட்டுமே பேசி வந்துள்ளார் என தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

”10 ஆண்டுகளாக பொய் மட்டுமே பேசும் பிரதமர் மோடி” : தயாநிதி மாறன் MP விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் கச்சத்தீவு குறித்து எடுத்த நடவடிக்கை என்ன என்றும் பிரதமர் மோடி பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை என்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனம் மற்றும் நடைபயணம் மேற்கொண்டு “உதய சூரியன்” சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு மேற்கு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், "“எங்கு சென்றாலும் தமிழ்நாடு முதல்வர் மீதும், இந்தியா கூட்டணி மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

பிரதமர் மோடி தமிழ­ம் வருவதை வரவேற்கிறோம். ஆனால், சென்னையில் வெள்ளத்தின் போது வராதது ஏன்?. தமிழ்­நாடு அரசு 6000 ரூபாய் கொடுத்தது, மோடி பத்து பைசா கொடுத்தாரா?. அப்படிப்பட்டவர் ஓட்டு என்றால் மட்டும் சிரித்துக் கொண்டு, நடித்துக்கொண்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கொரோனா காலத்தில் நானும், அமைச்சர் சேகர் பாபுவும் இங்குள்ள நடுத்தர, ஏழை மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை செய்தோம். குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகளை சரி செய்தோம். தொடர்ந்து மக்களோடு, மக்களாக இருக்கிறோம்.

ஒருவரைப் பற்றி குறை கூறும் முன் உங்கள் முதுகை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று சொல்கிறோம். பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க ஏன் கச்சத்தீவு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பா.ஜ.க கூட்டணியில் இருந்த அ.தி.மு.க ஏன் வாய் திறக்கவில்லை?

தேர்தல் பத்திரம் மோசடி, பி.எம்.கேர்ஸ் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை இதையெல்லாம் திசை திருப்பத் தான் தேர்தல் சமயத்தில் அவர்கள் கச்சத் தீவு குறித்துப் பேசுகிறார்கள். பிரதமர் மோடி பொய்யை தவிர வேறு எதுவும் பேசமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளார். நியாயத்தை அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories