தமிழ்நாடு

“இது மக்களுக்கு கொடுப்பவர்களுக்கும், எடுப்பவர்களுக்குமான தேர்தல்” - செல்வப்பெருந்தகை பேட்டி !

இந்தியா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை அதிகளவு வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்வதே எங்கள் இலக்கு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

“இது மக்களுக்கு கொடுப்பவர்களுக்கும்,  எடுப்பவர்களுக்குமான தேர்தல்” - செல்வப்பெருந்தகை பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கழகம் சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கழக கூட்டணி கட்சியின் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

“இது மக்களுக்கு கொடுப்பவர்களுக்கும்,  எடுப்பவர்களுக்குமான தேர்தல்” - செல்வப்பெருந்தகை பேட்டி !

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொல்லப் பெருந்தகை பேசியதாவது, “இது மக்களுக்கு கொடுப்பவர்களுக்கும் எடுப்பவர்களுக்குமான தேர்தல் ஆகும். மக்களிடம் இருந்து எடுப்பவர் மோடி, மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எந்த வாக்குறுதியிலும் நிறைவேற்றாமல் மக்களை சந்தித்து வருகிறார் மோடி. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களை சந்தித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2019 ஆம் ஆண்டை விட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய உள்ளோம். பாசிச சக்திகளை ஒதுக்குகின்ற தேர்தலாக மக்கள் இதனை தீர்மானிப்பார்கள். இந்தியாவிற்கே இந்த தேர்தலில் தமிழ்நாடுதான் வழிகாட்டும்” என்றார்.

banner

Related Stories

Related Stories