தமிழ்நாடு

”ஹிட்லர் வரலாறு படித்தால் அதில் தெரிவது மோடி முகம்” : இரா.முத்தரசன் கடும் சாடல்!

ஹிட்லர் வரலாறு படித்தால் அதில் மோடி முகம் தெரியும் என இரா. முத்தரசன் கடுமையாகச் சாடியுள்ளார்.

”ஹிட்லர் வரலாறு படித்தால் அதில் தெரிவது மோடி முகம்” : இரா.முத்தரசன் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே "மக்கள் முதலமைச்சர் மனிதநேய திருநாள், தோழமை காக்கும் பண்பாளர் சொன்னதைச் செய்யும் மாண்பாளர்" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71ஆவது பிறந்தநாள் புகழரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமை தாங்கினார். டி.ஆர்.பாலு எம்பி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சி.பி.ஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசுகையில், "ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படித்தால் அதில் ஹிட்லரின் முகம் தெரியாது. அதில் தெரிவது மோடியின் முகம். 142 கோடி மக்கள் என் குடும்பம் என தெரிவிக்கும் மோடி, தான் கட்டிய மனைவியோடு சேர்ந்து வாழத் தெரியாத மனிதர் அவர்" என பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், "தமிழ்நாட்டில் பா.ஜ.க பூஜ்ஜியம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியோடு இணைந்து தி.மு.க தலைமையிலான கூட்டணி 40க்கு 40 வெற்றி வாகை சூடி மோடியை வீட்டிற்கு அனுப்பும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories