தமிழ்நாடு

கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ... தலைவர்கள் கண்டனம்... - பின்னணி என்ன?

கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய பாஜக பிரமுகர் குஷ்பூவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ... தலைவர்கள் கண்டனம்... - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திமுக ஆட்சியமைந்த பிறகு மகளிருக்கு பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பலவையை சொல்லலாம். தேர்தல் வாக்குறுதியில் திமுக அளித்த உறுதியினை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை, கடந்த ஆண்டு (2023) அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று (செப். 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கு வழிவகை செய்கிறது. பெண்களுக்கு மிகவும் எளிதாக வேண்டும் என்று இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டம் மூலம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது ஒவ்வொரு குடும்ப பெண்களின் உரிமைத் தொகை என்பதாலே இதற்கு கலைஞர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ... தலைவர்கள் கண்டனம்... - பின்னணி என்ன?

இந்த கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைகின்றனர். தற்போது வரை மாதம் தவறாமல் குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை சென்றடைகிறது. இதன் மூலம் பெண்கள், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய சிறு சிறு பொருட்களையும் வாங்கி மகிழ்கின்றனர்.

இந்த உரிமைத் தொகை திட்டத்தை நாடே பாராட்டி வரும் நிலையில், பல மாநிலங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கர்நாடக மற்றும் 5 மாநில தேர்தலில் கூட காங்கிரஸ் தங்கள் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையை வாக்குறுதியாக அளித்தது. இப்படி நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திட்டத்தை தற்போது பாஜக பிரமுகர் குஷ்பூ விமர்சித்துள்ளளார்.

கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ... தலைவர்கள் கண்டனம்... - பின்னணி என்ன?

நேற்று நடைபெற்ற பாஜக நிகழ்வில் கலந்துகொண்ட நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பற்றி விமர்சித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், “மகளிருக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா?” என்று தமிழ்நாடு அரசின் திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

இவரது பேச்சு தமிழ்நாடு அரசை மட்டுமல்ல பெண்களையும் அவமானப்படுத்தும் விதமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி பேசுவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன், “பண வசதி படைத்த பெரிய நடிகை குஷ்பூக்கு நிச்சயமாக இங்கு உள்ள ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. மகளிர் உரிமைத் திட்டம் குறித்து நடிகை குஷ்பூ இழிவு படுத்தி பேசுவதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலைஞர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ... தலைவர்கள் கண்டனம்... - பின்னணி என்ன?

தொடர்ந்து திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, “எளிய குடும்பத்தில் வாழும் பெண்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை, ஓட்டு பிச்சைக்காக கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் பாஜக பொறுப்பாளர் குஷ்பூ. பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ வெறுப்பை விதைக்க இப்போது வாய் திறந்துள்ளார்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மல்யுத்த வீராங்கனைகள், மணிப்பூர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் உள்ளிட்ட வன்கொடுமை குறித்து குஷ்பூ வாய் திறக்காததற்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது குஷ்பூ இப்படி பேசியிருப்பது தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories