தமிழ்நாடு

”தீய சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” : அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!

தீய சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

”தீய சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” : அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு சென்னை சூளையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு "தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் சித்து வேலை எடுபடவில்லை. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பா.ஜ.க தமிழ்நாட்டில் வேரூன்றப் பார்க்கும் அனைத்து முயற்சிகளையும் திராவிட மண் தவிடு பொடியாக்குகிறது. பா.ஜ.க கொள்ளைப்புற வழியாக வந்தாலும் சரி, குறுக்கு வழியாக வந்தாலும் சரி தீய சக்திகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் "இந்திய நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை நோக்கி செல்கிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமர் போப் ஆண்டவரையும், இஸ்லாமியத் தலைவர்களைக் கட்டி அணைக்கிறார். ஆனால் இந்தியாவில் பிற மதத்தினரை போட்டியாகப் பார்க்கிறார். வெறுப்பைப் பரப்புகிறார். மதத்தைக் கொண்டு மக்களின் உணர்வைத் தூண்டுகிறார். மோடி எனும் பேராபத்தை உணராமல் வடமாநில மக்கள் ஏமாறுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories