தமிழ்நாடு

”என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார் பேராசிரியர்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

என் நெஞ்சில் என்றும் பேராசிரியர் நீங்காதிருப்பார் என நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

”என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார் பேராசிரியர்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், தமிழக அரசியலின் முதுபெரும் அரசியல் தலைவருமாக விளங்கிய பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகன் இவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து என் நெஞ்சில் என்றும் பேராசிரியர் நீங்காதிருப்பார் என நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்!

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்." என தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா வழி வந்த கொள்கை முழக்கம் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர் - கழகத் தலைவர் அவர்களின் அன்புக்குரிய வழிகாட்டி, நம் இனமானப் பேராசிரியர் தாத்தாவின் 4- ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

பகுத்தறிவு - சுயமரியாதை - சமூக நீதி - தமிழர் ஏற்றம் உள்ளிட்ட திராவிட இயக்க கொள்கைகளை தன் கடைசி மூச்சு உள்ள வரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்த பேராசிரியர் தாத்தாவின் புகழை போற்றுவோம். அவர் வழியில் அயராது உழைத்து, இந்தியாவின் அடையாளத்தையும் - தமிழ்நாட்டின் உரிமைகளையும் நாட்டை பிளவுபடுத்தும் பாசிச சக்திகளிடமிருந்து மீட்டெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories