தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து : “நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி” - பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலியோ சொட்டு மருந்து : “நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி” - பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முழுவதும் இன்று (03.03.2024) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட சுமார் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாமானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

5 வயதுக்குட்பட்ட சுமார் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் கட்டாயம் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து : “நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி” - பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.

இந்த சூழலில் போலியோ இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள். நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories