இந்தியா

இந்தியாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை : வடஇந்திய கும்பல் வெறிச்செயல் !

இந்தியாவில் வெளிநாட்டு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை : வடஇந்திய கும்பல் வெறிச்செயல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், இரு சக்கர வாகனத்தில் ஆசியா முழுக்க சுற்றிப்பார்க்கும் விதமாக சுற்றுலா விசா எடுத்துக்கொண்டு ஆசியா வந்துள்ளனர். இதற்காக வங்கதேசத்துக்கு வந்த அந்த தம்பதியினர், பின்னர் நேபாளம் சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்தியா வந்து பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேபாளத்தில் இருந்து பீகார் வழியாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வந்துள்ளனர். அங்கு தும்கா மாவட்டத்தை அந்த தம்பதி கடந்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கே ஒரு இடத்தில் டெண்ட் அமைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர். இரவு நேரத்தில் அந்த தம்பதி தங்கியிருந்த இடத்துக்கு சுமார் 7 முதல் 10 பேர் வரை இருக்கும் ஒரு கும்பல் வந்துள்ளது. வந்தவர்கள் கணவரை தாக்கிவிட்டு பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து இழுத்துச்சென்றுள்ளனர்.

இந்தியாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை : வடஇந்திய கும்பல் வெறிச்செயல் !

அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் போலிஸார், 3 பேரைக் கைதுசெய்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர். இந்தியாவில் வெளிநாட்டு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories