தமிழ்நாடு

”அம்பேத்கரின் கனவுகளை சிதைக்கும் பா.ஜ.க” : அகிலேஷ் கடும் விமர்சனம்!

அம்பேத்கரின் கனவுகளை பா.ஜ.க சிதைக்கிறது என அகிலேஷ் விமர்சித்துள்ளார்.

”அம்பேத்கரின் கனவுகளை சிதைக்கும் பா.ஜ.க” : அகிலேஷ் கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையான பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களைக் கடந்து இன்று உத்தர பிரதேசம் வந்தது.

பின்னர் உத்தர பிரதேச மாநிலம் வந்த ராகுல் காந்தியின் பயனத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கலந்து கொண்டார். இவர்கள் இவருக்கும் உத்தர பிரதேச பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி எம்.பி "நீங்கள் ஏழையாக இருந்தால் 24 மணி நேரமும் இந்த நாட்டில் அநீதியைச் சந்திக்க நேரிடும். வெறுப்புக்குக் காரணம் அநீதி.வெறுப்பை அன்பினால் மட்டுமே வெல்ல முடியும்." என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அகிலேஷ், ”அம்பேத்கரின் கனவுகள் பா.ஜ.கவால் சிதைக்கப்படுகிறது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்றுள்ளது நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு சவாலாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories