தமிழ்நாடு

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது : இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ”நம்மாழ்வார் விருது”.

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது : இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்கனவுகள் என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சில:-

1.தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட வேளாண் பயிர்களில் பரப்பு விரிவாக்கம் - ரூ. 108 கோடி நிதி ஒதுக்கீடு.

2.பயறு பெருக்குத் திட்டம், 4.75 இலட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.

3.துவரை சாகுபடிப் பரப்பு குறைந்துவரும் மாவட்டங்களில், துவரை சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க 50,000 ஏக்கர் பரப்பில், துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

4.உணவு எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் விதமாக எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடியை 2.50 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

5.எள் சாகுபடிப் பரப்பு, மகசூலை அதிகரித்திட, எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.

6.சூரியகாந்தி பயிரின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட, சூரியகாந்தி சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

7.1,500 ஏக்கர் பரப்பளவில், வீரிய ஒட்டு இரக ஆமணக்கு சாகுபடியை ஊக்குவித்திட ஆமணக்கு சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.18 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

8.பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம் - ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு.

9.விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் 15,810 மெட்ரிக் டன் தரமான நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து விதைகள் 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

10.பிற மாநில உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகளின் சான்று பெற்ற விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது : இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்!

11.50,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில், 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு.

12.துத்தநாக சல்பேட், ஜிப்சம் உரங்கள் 4 இலட்சம் ஏக்கர் நெல் பரப்பிற்கு விநியோகித்திட ரூ.9 கோடி மானியம்.13.2 இலட்சம் ஏக்கர் நெற்பயிர் பரப்பில் நுண்ணூட்ட உரக் கலவை, வழங்கிட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

14.ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் - விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைத்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

15.ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்குப் பரிசு:

16.மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ. 55 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

17.நெற் பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப்பயிர் ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்.

18.பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கிட, ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் மானியம், 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு

19.உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ”நம்மாழ்வார் விருது” வழங்க ரூ. 5 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

20.இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

banner

Related Stories

Related Stories